இராய் அந்தோனி அர்னால்டு எழுதியவை | April 9, 2011

இளநீர்-மோர்-மற்றும்-பெப்சி-கோலா..

உலக நியதி
உலகம் என்பது இப்போது ஒரு கிராமம் ஆகா மாறி விட்டது அமெரிக்காவில் ஒருவன் தும்மினால் அமிஞ்சிகரையில் கேட்க்கும் காலம் இது 

சின்ன தத்துவம்
உலக கிழவியை விட உள்ளூர் அழகியே மேல்

இப்போ நான் சொல்ல வர விஷயம் என்ன வென்றால்

கோக கோல மற்றும் பெப்சி இரண்டையும் நிறுத்த வேண்டும் என்று ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது
கேரளா பிளாசிமடா தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்க பார்க்கிறது

இப்படி நம் மண்ணில் ஆதார சுருதியாக உள்ள நீரை உறிஞ்சி விவசாயம் இப்போது இல்லை
எப்போது தங்க முட்டை இடும் வாத்தை ரியல் எஸ்டேட் என்னும் அரக்கன் இடம் கொடுத்தோமோ அன்றே
நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயம் அழிவை நோக்கி செலுத்த ஆரம்பித்து விட்டோம்

இப்போது நான் சொல்ல வந்த விஷயம் உலகம் என்பது நாம் அனைவரயும் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது அதுதான்
நியதி கூட

இல்லை நான் இந்தியா பொருளை மட்டுமே பயன்படுத்வேன் என்று கூறினால்
அதை போல மேலை நாட்டவர் நம் பொருளை வாங்க மறுத்தால் நம் ஏற்றுமதி என்னாவது .நம் தயாரிக்கும் பொருளை நாம் மட்டுமே பயன்படுத்தும் நிலை வரும்

இன்று நம் மக்கள் அதிகமான பேர் வெளிநாடு செல்ல காரணம் என்ன இங்கு உழைப்புக்கேற்ற ஊதியம் சரியாக கிடைத்தால் ஏன் வெளிநாடு என்ற மோகம் வர போகிறது

ஊரிலே பிழைக்க சரியான வழி .சமச்சீர் சம்பளம் என்பது இருந்தால் யாரும் வெளிநாடு என்பதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சம்பளம் தனியார் பள்ளி ஆசிரியகர்களுக்கு ஒரு சம்பளம் என்று இருக்கும் போது குறைவான சம்பளம் வாங்கும் அவனின் மனநிலை எப்படி இருக்கும்
அவன் தன சூழ்நிலை மாற நினைப்பது இயல்பு அதற்க்கு அவன் தேர்ந்தெடுக்கும் களம வெளி மாநிலம் வெளி நாடு இங்கு தனியார் பள்ளியிலோ அல்லது நிறுவனத்திலோ பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு அவன் அடையும் நிலையை வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் தருகிறது
இந்த விஷயம் எல்லோருக்கும் சரிப்பட்டு வராது என்று நீங்கள் நினைப்பது சரி
ஆனால் இதே விசயம் பல பேருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதே .அவன் வாழக்கை வீணாக போனாலும் அவன் வரும் தலைமுறைக்கு இந்த பணம் பயன் படுகிறதே
இந்திய அரசுக்கு மிக பெரும் உதவியாக இருப்பதே இந்த அந்நிய செலவாணி வருமானம் கூடத்தானே

யாரும் வேண்டும் என்று இந்த வெளி நாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது இல்லை அவர்கள் படிப்பு தொழிலுக்கு ஏற்ற சரியான சூழ்நிலை மற்றும் சம்பளம் கருதியே இந்த வெளிநாட்டு வாழ்க்கை தேர்ந்து எடுக்கின்றனர்

அதே போல  கோலா மற்றும் பெப்சி
நம் மண்ணில் எத்தனையோ தரமான தயாரிப்புகள் உள்ளன
நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயத்தை சார்ந்த மோர் இளநீர் நுங்கு போன்றவைகள்

இன்றைய இளைய தலைமுறை குடிப்பதை கௌரவ குறைச்சல் என்று நினைக்க காரணம்
அயல் நாட்டு நிறுவனங்கள் செய்த மூளை மழுங்கடிக்கும் விளையாட்டு சினிமா கலைஞர்களின் ஆடம்பர விளம்பரம் தவிர வேறு எதுவும் இல்லை .இவர்களுக்கு தேவை கோடிக்கணக்கான பணம் மட்டுமே இதனால் ஏற்படும் பாதகம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை

நாம் ஒவ்வொரு முறை மோர் குடிக்கும் போதும் ஒரு விவசாயி நன்றியுடன் நம்மை பார்ப்பான் .இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும்

நான் அந்நிய பொருள்களை முழுவதும் ஆகா புறக்கணியுங்கள் என்று சொல்ல வில்லை
ஆனால் அந்த பொருள்களை நாம் பயன் படுத்துவதால் நம் இந்திய மண்ணிற்கு வருங்கால இயற்கைக்கு நாம் எவ்வளவு பெரும் தீமை செய்கிறோம் என்று மட்டும் நினைத்து பாருங்கள்

” வரும் கோடை காலம் முழுவது மோர் ,மற்றும் இளநீர் மட்டும் குடிப்போம் என்று சபதம் எடுப்போம் அனைவரிடம் இதை எடுத்து செல்வோம் “

அதிகமான அளவில் இந்திய பொருளை பயன்படுத்துவோம் .

இந்த பதிவு சொல்ல வந்த நோக்கம் புரிந்தால் மட்டும் வாக்களிக்கவும் இல்லை என்றால்
என்ன தவறு என்று பின்னுட்டம் இடவும்

உலக வாழ்க்கையில் நாம் அனைவரயும் சார்ந்தே இருக்க வேண்டும் ஆனால் அதிகமாக சார்ந்து இருக்க வேண்டாம் என்பதே என் கருத்து .
நன்றி : ஹாய் அரும்பாவூர்.



*****************************************************************************************

என்றும் அன்புடன்,                                  Yours,

சந்திரமோகன்,                                        Chandramohan,
 

தமிழ்நாடு: 9952531858.                            Tamil Nadu: 9952531858.
ஹைதராபாத்: 8106375296.                      Hyderabad: 8106375296.


மறுவினைகள்

  1. Great!

  2. pl send more


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers