இராய் அந்தோனி அர்னால்டு எழுதியவை | December 11, 2009

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா !



ஒன்பதரை மணி காலேஜிக்கு


ஒவ்வொருத்தனா கெளம்பும் போது


ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்


ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்
.. .


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ


அரை குறையா குளிச்சதுண்டு


பத்து நிமிஷ பந்தயத்துல


பட படன்னு சாப்டதுண்டு


பதட்டதோட சாப்பிட்டாலும்


பந்தயத்துல தோத்ததில்ல
,

லேட்டா வர்ற நண்பனுக்கு


பார்சல் மட்டும் மறந்ததில்ல
!


விறுவிறுன்னு நடந்து வந்து


காலேஜ்
Gate நெருங்குறப்போ

வெறுப்படிக்கிதுடா மச்சான் னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா
,

வேற எதுவும் யோசிக்காம


வேகவேகமா திரும்பிடுவோம்


வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க
,

இல்ல
மனிஸ் தியேட்டர்ல படம் பாக்க !


கஷ்டப்பட்டு காலேஜிக்கு போனா

கடங்கார
professor கழுத்தறுப்பான் .. .

assignment
எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்
!


கேலி கிண்டல் பஞ்சமில்ல
,

கூத்து கும்மாள குறையுமில்ல
,

எல்லாருக்கும் சேத்துதான்
punishment ன்னா

H.O.D
ய கூட விட்டதில்ல !


ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா


அத அடிப்பான் காபி அந்தபக்கம்


ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து


ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு
!


பசியில யாரும் தவிச்சதில்ல


காரணம்
- தவிக்க விட்டதில்ல .. .

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்


சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல
!


அம்மா ஆசையா போட்ட செயினும்


மாமா முறையா போட்ட மோதிரமும்


fees
கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல


சட்டைய மாத்தி போட்டுக்குவோம்


சாதி சமயம் பாத்ததில்ல
,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்


முகவரி என்னன்னு கேட்டதில்ல
!


படிச்சாலும் படிக்கலன்னாலும்


பிரிச்சி வச்சி பாத்ததில்ல
.. .

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்


அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல
!


வேல தேடி அலையுறப்போ


வேதனைய பாத்துப்புட்டோம்


வெட்டி ஆபிஸர் னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்
!


ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு


ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ


மனசு
கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு
எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் .. .

பக்குவமா இத கண்டும் காணாம


நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ


சாப்பாட்ல காரம்டா மச்சான் னு

சமாளிச்சி எழுந்து போவோம்
.. .


நாட்கள் நகர
,

வருஷங்கள் ஓடுது
,

எப்போதாவது மட்டுந்தான் இ
- மெயிலும் வருகுது

“Hi da machan… how are you?”
வுன்னு .. .


தங்கச்சி கல்யாணம்
,

தம்பி காலேஜி
,

அக்காவோட சீமந்தம்
,

அம்மாவோட ஆஸ்த்துமா
,

personal loan interest,


housing loan EMI,


share market
சருக்கல் ,

appraisal
டென்ஷன் ,

இந்த கொடுமையெல்லாம் பத்தா


இன்னிக்காவது பேச மாட்டாளா ?’ ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்
,

.


.


.


எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா
,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா
!


- மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்


கம்பெனியில ஓசி
phone இருந்தாலும்

கையில
calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல


நண்பனோட குரல கேக்க


நெனச்சாலும் முடியறதில்ல


பழையபடி வாழ்ந்து பாக்க
!


அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்


orkut
இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

‘available’
ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

ஏண்டா பேசல ?’ ன்னு கோச்சிக்க தெரியல . .

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல
!


தேசம் கடந்து போனாலும்


பாசம் மறந்து போகாது
!

பேசக் கூட மறந்தாலும்


வாசம் மாறி போகாது
!

வருஷம் பல கழிஞ்சாலும்


வரவேற்பு குறையாது
!

வசதி வாய்ப்பு வந்தாலும்


மாமா மச்சான் மாறாது !


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers